தஞ்சாவூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
கும்பகோணம் அருகே, ஊர் பொதுகுளத்தில், மீன்கள் கொத்து, கொத்தாக செத்து மிதந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே புளியம்பாடி மேல தெருவில் ஊர் பொது குளம் உள்ளது. அக்குளத்தை அப்பகுதியை சேர்ந்த சுரேந்தரன் என்பவர் கடந்தாண்டு ஏலத்தில் எடுத்து மீன்கள் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று திடீரென குளத்தில் உள்ள ஏராளமான மீன்கள் கொத்துக் கொத்தாக செத்து மிதந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுரேந்திரன். மேலும் அதுக் குறித்து, கபிஸ்தலம் காவல் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அவரளித்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குளத்தில் உள்ள நீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
மேலும் இது சமூக விரோதிகளின் செயலா அல்லது வெயிலின் தாக்கமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளத்தில், மீன்கள் கொத்து, கொத்தாக செத்து மிதந்த சம்பவம், அப்பகுதியில் பெருத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.