கும்மிடிப்பூண்டி, மே. 31 –

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஈகுவார்பாளையம் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு ஊராட்சி மக்களுக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் எஸ் ராமன் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஸ்ரீதர் கால்நடைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு .நாசர் கலந்துக் கொண்டு பழங்குடி இனமக்களுக்கு 140 நபர்களுக்கு இலவச பட்டா.குடும்ப அட்டை. வாழ்வாதாரம் பேணிக் காக்க இஸ்திரி பெட்டி தென்னை மரக்கன்றுகள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

முன்னதாக 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை, 25,41,000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட துவக்கப் பள்ளி சுற்றுச் சுவர், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனை சாலை ஆகியவற்றை மக்களின் பயன்பாட்டிற்காக பால்வளத் துறை அமைச்சர் சா.மு நாசர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழு தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர் மணிபாலன், கே வி ஆனந்த் குமார் பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன்.லக்ஷ்மி நாராயணன், பரத் குமார் மற்றும் கழக நிர்வாகிகளும் ஊராட்சி பிரதிநிதிகளும் பொதுமக்கள் தொண்டர்களும் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here