கும்பகோணம், ஜூன். 23 –
கும்பகோணம் அருகேவுள்ள திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி நிலவுவதால் அதனை எதிர்த்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர் அதனால் திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டாநகரம் கிராமத்தில் பருத்தி கொள்முதல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 500 குவிண்டால்கள் பருத்தி கொண்டு வந்தனர். இதில் பல விவசாயிகளின் பருத்திக்கு அங்குள்ள அரசு உயர் அலுவலர்கள் சரியான விலை நிர்ணயம் செய்யவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
இச்செயலைத் தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசு அலுவலர்களைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தகவலறிந்து வந்த திருப்பனந்தாள் காவல்துறையினர் விவசாயிகளுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்..