தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய மூலம் நடைபெறும் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் பொதுப்படணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைப்பெற்றது.

சென்னை, செப் . 15 –

அமைச்சர் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு, நீர் வள ஆதார அமைப்புகளான வாய்க்கால், குளம், ஏரி ஆகியவற்றில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் போது ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும் சாலைப்பணிகளுக்காக மாற்றி அமைக்கப்படும் மின் உபகரணங்களுக்கு உரிய மதிப்பீடு ஒப்புதல் அளித்தல், மின் பாதைகளை மாற்றியமைக்க ஒப்புதல் மற்றும் நடைப்பெற்று வரும் பணிகளை விரைவுப் படுத்துதல் ஆகியவற்றுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும், அரசு அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்கள்.

மேலும் சாலைப்பணிகளுக்கு தேவைப்படும் தடையின்மை சான்று ஒப்புதல் அளித்தல், நில கையகப் படுத்தும் பணிகளை விரைவுப் படுத்துதல், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடுவர் மன்ற தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்தல், மூலப் பணிகளுக்கு தேவைப்படும் மண், கிராவல், மற்றும் ஜல்லி எடுப்பதற்கான அனுமதி அளித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் கனிம வளம் ஆகியோர்கள் உரிய அனுமதியினை விரைந்து வழங்குவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது,

சாலைப்பணிகளை விரைந்து முடிப்பதற்காக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனவும், மேலும் நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுத்து வருதாகவும் தெரிவித்தார்கள்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதுரை மண்டல அலுவலர் சிவாஜி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சென்னை மண்டல அலுவலர் சோமசேகர், தலைமைப் பொறியாளர் பாலமுருகன், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்ததாரர்கள் ஆகியோர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here