தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
டெல்டா மாவட்டத்தில் தஞ்சாவூர் தொகுதி உள்ளிட்ட தமிழ்நாட்டில் மொத்தம் 15 சீட்டுகளை காங்கிரஸ் கட்சி எதிர்பார்ப்பதாக அக்கட்சியின் மாநகர தலைவர் பி ஜி ராஜேந்திரன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாநகர, மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகரத் தலைவர் பி. ஜி. ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது பேசிய அவர், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருப்பது விவசாயம், மீன்பிடித் தொழில், நெசவுத்தொழில் உள்ளிட்டவைகளாகும்.
மேலும் அன்றாட உணவுத் தேவைகளையும் மீன்பிடி தொழில் பூர்த்தி செய்கிறது, இந்நிலையில் மீனவர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருவதை முன்னிட்டு அவருக்கு ராமேஸ்வரம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் இன்றும் 28 ஆம் ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று கூறினார்.
மேலும் விஜயதாரணி எம்பி ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டு பாஜகவிற்கு சென்றுள்ளார், தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையில் காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது, பாஜக கூட்டணி சிதறி உள்ளது, அவர்களை நம்பி போக யாரும் தயாராக இல்லை என்றும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியை காங்கிரஸுக்கு கேட்கிறோம், 39 தொகுதியில் போட்டியிட ஆசைதான், அதற்கான வலிமை வேண்டும், நாங்கள் எதிர்பார்ப்பது 15 சீட்டு என்றும், பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்றும் அப்போது அவர் கூறினார், அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பழனி, கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பேட்டி:பி ஜி ராஜேந்திரன் மாநகர தலைவர் தஞ்சாவூர்