திருவள்ளூர், பிப். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

இந்தியாவில் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க வலியுறுத்தியும், பாஜக அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் அதன் தலைவர் இப்ராஹீம் தலைமையில் திருவள்ளூர் இரயில்வே நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு மற்றும் சங் பரிவார் அமைப்புகள் இந்திய ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வகையில் மத வெறுப்பு உணர்வை தூண்டி வருவதாகவும், அதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வழிப்பாட்டுத் தலங்கள் தொடர்ச்சியாக இடிக்கப்பட்டு வருவதாக அவர்கள் முழக்கமிட்டனர்.

மேலும் இந்திய ஜனநாயகத்திற்கு எதிரான இது போன்று வழிப்பாட்டுத்தலங்கள் இடிக்கப்படுவதை உடனடியாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தொடர்ந்து உலகிலேயே பன்முகத் தன்மையுடன் சிறந்து  விழங்கும் இந்தியாவின் பன்முகத்தன்மை மாறாமல் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்ய வேண்டும் எனவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஞானவாபி மசூதி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிய நீதி வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக  மாநில துணை தலைவர் E. ஃபாரூக்,  மாவட்ட துணைச் செயலாளர்  ஜாஃபர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட இஸ்லாமிய பெண்கள் ஆண்கள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் திரளாக பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here