மீஞ்சூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி …
நேற்று மேதின விடுமுறையை முன்னிட்டு நண்பர்களோடு சேர்ந்து கல்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி ஒன்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் கிரண் ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு தவறுதாலக சென்றதைத் தொடர்ந்து அவருக்கு நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கிவுள்ளார் அதனைத் தொடர்ந்து கரை மீதுயிருந்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டு அவரை அழைத்த போதும் வெளியே வராத தால் உடனடியாக மீஞ்சூர் காவல்துறையினருக்கு தகவலளித்து அதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர். இரவு 7 மணி வரை உடலை தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேடல் பணி நேற்று நிறுத்தப்பட்டு மேலும் இன்று தொடங்குவதாக இருந்த நிலையில் அந்த ஏரியில் இன்று அதிகால் கிரணின் உடல் ஏரியில் மிதந்து உள்ளது. அதனைப் பார்த்த அவரது உறவினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் அங்கு வந்த அவர்கள் கிரணின் உடலை மீட்டு உடல் கூறாய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சி எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணாசிங் இவரது மனைவி பிண்டுகுமாரி, இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் ஐந்தாவதாக ஒரே ஒரு மகன் கிரண் (23) சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
மே 1ஆம் தேதி விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் மீஞ்சூரை அடுத்த கல்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள ஏரியில் மதியம் 1 மணி அளவில் குளிப்பதற்காக சென்றுள்ளார் , அப்பொழுது சரிவர நீச்சல் தெரியாத நிலையில் ஏரியின் ஆழத்தில் சென்றவர் நிலை தடுமாறி தண்ணீரில் மூழ்கி மாயமானார்.
இதனை கரையின் மேற் புறத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்த நண்பர்கள் கூச்சலிட்டு, அதுக் குறித்த தகவலை உடனடியாக மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொன்னேரி தீயணைப்பு வீரர்களை அழைத்து தேடும் பணியில் ஈடுபட்டனர். அன்று இரவு 7 மணி வரையும் கிரணின் உடலைத் தேடியும் கிடைக்காததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணியை இன்று தொடங்குவதாக இருந்தது.
இந்நிலையில் தனது மகனை பறிக்கொடுத்து உடலை தேடும் பணியை கரைமேல் நின்று பார்த்துக் கொண்டிருந்த அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி வேதனையுடன் வீடு திரும்பினர்.
இந்நிலையில் மறுநாளான இன்று விடியற் காலையில் ஏரியில் மிதந்த கிரணின் உடலை உறவினர்கள் பார்த்து காவல்துறையினர் உதவியுடன் அவரின் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மீஞ்சூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.