காஞ்சிபுரம், மே. 4 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…

காஞ்சிபுரம் மாவட்டம்,  ஊவேரி சத்தரம் கிராமத்தில் உள்ள          பிடிலீ பொறியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் ஆண்டு விழா அக்கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைப்பெற்றது. அவ்விழாவிற்கு செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவர் முன்னாள் நீதிபதி பொன். கலையரசன்   தலைமையேற்று குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

அறிவியல் மற்றும் மானுடவியல் துறை தலைவர் கே. சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வர் டாக்டர் பழனிசாமி கல்லூரியின் ஆண்டறிக்கை வாசிக்க, அறங்காவலர்கள், முன்னாள்  கலெக்டர் சந்திரசேகரன் ,சாந்த பிள்ளை ,கண்ணையன் , ரேணுகா, வெங்கடேசன், அரிஸ்டாட்டில், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரியின் இயக்குனர்  அருளரசு மற்றும் அறக்கட்டளையின் செயலாளர்  சாம்பசிவம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள், அதனைத் தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்னர். பல்கலைக்கழக தேர்வுகளில் துறை ரீதியாக முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here