ராமநாதபுரம், நவ.16-
ராமநாதபுரம் மாவட்டத்தில் சைல்டு லைன் உங்கள் நண்பன் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த நவ.14 தொடங்கிய இம்முகாம் எதிர் வரும் நவ.21ம் தேதி வரை எட்டு தினங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று குழந்தைகள் நலக்குழு தலைவர் துரைராஜ் கூறினார்.

சைல்டு லைன் என்பது தேசிய அளவில் குழந்தைகளுக்காக 24 மணி நேரமும் செயல்படும் இலவச அவசர தொலைபேசி எண் 10 98 ஆகும். சைல்டு லைன் மூலம் நாடு முழுவதும் உள்ள தெருவோர குழந்தைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள குழந்தைகள் காவல்துறை மற்றும் சுகாதாரதுறை மூலம் உதவியை இலகுவாகப் பெற முடியும். 10 98 இலவச தொலைபேசி எண் குழந்தைகள் 24 மணி நேரமும் 365 நாட்கள் தொடர்பு கொள்ள தங்கள் பிரச்சினைகளை கூற உதவியாக இருக்கின்றது. இந்தியா பவுண்டேஷன் என்ற நிறுவனம் இந்தியா முழுவதும் சைல்டு லைன் 10 98 சேவையை இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் செய்து வருகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக நவம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சைல்டு லைன் உங்கள் நண்பன் என்ற நிகழ்ச்சி நாடு முழுவதும் சைல்டு லைன் அமைப்பின் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் ஆதரவற்ற குழந்தைகள் அனை வருக்கும் உறு துணையாக இருப்பதையும் எடுத்துக் கூறவே இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.


 ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் சைல்டு லைன் சார்பாக 14-ஆம் தேதி முதல் நவம்பர் 21 ஆம் தேதி வரை சைல்டு லைன் உங்கள் நண்பன் என்ற நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பே திட்டமிடப்பட்டது.

இம் முகாம் பற்றி ராமநாதபுரத்தில் குழந்தைகள் நலக்குழு தலைவர் துரைராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சைல்டு லைன் சேவை ஆரம்பிக்கப்பட்டு பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவி செய்தல் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் குழந்தைகளை வன்கொடுமைகளில் இருந்து காப்பாற்றுதல் போன்ற சேவைகளை அரசுத் துறைகளான மாவட்ட நிர்வாகம், காவல்துறை, குழந்தைகள் நலக்குழு, இளஞ்சிறார் நீதிமன்றம், குழந்தைகள் வளர்ச்சி திட்டம், கல்வித்துறை, சமூகநலத்துறை, தொலைத்தொடர்பு துறை, உள்ளாட்சித் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து  செயல்பட்டு வருகின்றது.

கடந்த 2018 நவம்பர் முதல் 2019 அக்டோபர் வரை சைல்டு லைன் இலவச தொலைபேசி மூலம் 2423 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இந்த அழைப்புகள் மூலமாக சைல்டு லைன் குழு உறுப்பினர்கள் களப்பணியில் கண்டறிந்ததின் மூலம் மொத்தம் 1299 தலையீடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் குழந்தைத் திருமணம் தடுத்தல், பள்ளி இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புதல், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டெடுத்தல், கொத்தடிமை தொழிலாளர் மீட்பு, பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்பு போன்ற பல்வேறு பணிகள் மேற் கொள்ளப் பட்டுள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here