திருவள்ளூர், மார்ச். 15 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணியின் துணை அமைப்பாளர் ஏற்பாட்டில் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக-வினர்  மார்ச் 1 ஆம் தேதி முதல் தொடர்ந்து ஏழை, எளியோர், நலிந்தோர் மற்றும் மாணவ, மாணவியர்கள் என பல்வேறு பிரிவினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பூண்டி கிழக்கு ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு, பேனா, பென்சில், புத்தக பை மற்றும் அறுசுவை உணவென பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் தலைமையில் நடைப்பெற்து.

இந்நிகழ்ச்சியில்  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சி பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஜான் என்கிற பொன்னுசாமி முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் காண்டீயப்பன் ஏற்பாட்டில் அந் நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் கோல்டு மணி என்கிற மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் சுதாகர், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சிவையா , ஒன்றிய துணைச் செயலாளர் சித்ரா பாபு, மாவட்ட பிரதிநிதிகள் சீனிவாசலு, ரகு, பூண்டி ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் சீனிவாசன் ஒன்றிய துணை செயலாளர் வேல்முருகன், அம்மம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சரசு பூபாலன், கச்சூர் ரஞ்சித் குமார், மற்றும்  மாவட்ட ஒன்றிய பேரூர்  நகர கிளை கழக நிர்வாகிகள் மற்றும்  உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்  என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here