செய்தி சேகரிப்பு இசிஆர். பா.வினோத் கண்ணன்

சென்னை வேளச்சேரியில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று அரசிடம் முறையான அனுமதி மற்றும் தகுந்த விதிமுறைகள் பின் பற்றாமல் செயல்பட்டு வந்த விடுதிக்கு சீல் வைக்க வந்த அரசு அலுவலர்களிடம் அங்கு தங்கியிருக்கும் பெண்கள் உட்பட பலர் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர்.இதனால் அங்கு திடீரென பரபரப்பு நிலவியது.

வேளச்சேரி, செப் .6 –

சென்னை வேளச்சேரி டென்சி நகரில் ஷுலா ஜேன் எனும் தனியார் பெண்கள் விடுதி செயல் பட்டு வருகிறது. இதில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கட்டிட உரிமையாளர் சேகர் மாணிக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் வருவாய் கோட்டாச்சியர் உடன் துறை சார்ந்த அலுவலர்கள்  கடந்த 02.09.2021 அன்று விடுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.  அவ்வாய்வில் முறையான அரசு அனுமதி ஆவணங்கள் இன்றியும்,  அரசு வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காமல் பாதுகாப்பு மற்றும் சுகாதாரமின்றி விடுதியை நடத்தி வருவதால் விடுதிக்கு சீல் வைக்கப்பட உள்ளது என்ற அறிவிப்பு நோட்டீஸ் விடுதிக்கு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாரிகள் விடுதிக்கு சீல் வைப்பதற்க்காக வந்த போது விடுதியில் இருந்த 58 பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது :-

கட்டிட உரிமையாளர் சேகருக்கும் விடுதியின் உரிமையாளர் ஷிபாவிற்க்கும் உள்ள பிரச்சினையில் கால அவகாசம் கொடுக்காமல் விடுதியில் தங்கி வந்தவர்களை உடனடியாக வெளியேற்றினால் நாங்கள் எங்கு செல்லவோம் என்று கேள்வி எழுப்பியதால் அரசு சார்பில் தற்காலிகமாக மாற்று இடம் அளிப்பதாக அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். 

 

அதை ஏற்க மறுத்ததால் பின்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து உயர் அலுவலரின் பேச்சு வார்த்தையில் ஒரு வார கால அவகாசம் அளிக்கப் பட்டதை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு சீல் வைப்பதாக கூறிவிட்டு அரசு அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பிற்கு வந்த காவலர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இச் சம்பவத்தால் அப் பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here