ஆழ்வார்பேட்டை, செப். 7 –
சென்னை ஆழ்வார்பேட்டையில் குளோபல் ஹியூமன் பீஸ் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழா இந்நிறுவனத்தின் தலைவர் மானுவேல் நிறுவன முன்னாள் ஆணையர் சம்பத் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் தொலைகாட்சி ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியை ரேகா அவர்களுக்கு, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஆசிரியை ரேகா ஏற்கனவே கல்வி மற்றும் உடற்கல்வி துறைகளில் ஆற்றிய சேவைக்காக பல்வேறு பல்கலைக் கழகத்தில் இருந்து 3 தங்க பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி அளவில் பேச்சு போட்டி, கட்டுரை, கவிதை போட்டி, பட்டி மன்றம் போன்றவற்றில் மாநில மற்றும் தேசிய அளவில் பாராட்டுக்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
அதைப் போன்று மாவட்ட தடகள போட்டியின் அறிவிப்பாளர் மட்டுமல்லாமல், யோகா பயிற்சியாளராகவும், தேசிய மாணவர் சாதனையும் படைத்துள்ளார். இவ்வாறு பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்துள்ள ஆசிரியர் ரேகா அவர்களுக்கு இப் பல்கலைகழகத்தால் வழங்கப் பட்ட கௌரவ டாக்டர் பட்டம் அவருக்கு மேலும் ஒரு மணிமகுடம் என்றேக் குறிப்பிடலாம். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்தவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி அவர்களை பெருமைப் படுத்தினார்கள்.