சென்னை, ஏப். 18 –
சென்னையிலிருந்து கடையம் நோக்கி மகாகவிபாரதி மற்றும் துணைவியார் செல்லம்மாள் இணைந்து இருப்பதுபோல் நிறுவப்பட்ட திருவுருவச்சிலை தாங்கிய ரதயாத்திரை இன்று சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த திருநின்றவூர் பாக்கம் கசுவா பகுதியில் உள்ள சேவாலயா தொண்டு நிறுவனத்திலிருந்து பாரதியாரின் தங்கை வழி கொள்ளுப் பேத்தி கொடியசைத்து துவக்கி வைக்க ரதயாத்திரை புறப்பாடு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
ரதயாத்திரையின் முதற்கட்டமாக செங்கல்பட்டு வழியாக பாண்டிச்சேரி விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, எட்டயபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் பாரதி மக்களின் வாழ்க்கை தொடர்போடு வாழ்ந்து வந்த அனைத்து இடங்கள் வழியாக பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
மகாகவி சுப்பிரமணிய பாரதி, அவரின் மனைவி செல்லம்மா பிறந்த ஊரான கடையத்தில் மகாகவி சுப்ரமணிய பாரதி துணைவியாருடன் 2 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார், ஆனால் அதற்கான தடயங்கள் எதுவும் இப்பொழுது இல்லை என்பதால், இதனை போக்கும் வகையில் கடையத்தில் மகாகவி நினைவை நிலைக்கச் செய்யவேண்டும் என்ற திட்டத்தை ஆவடி அடுத்த பக்கம் கசுவா பகுதிகள் அமைந்துள்ள சேவாலயா தொண்டு நிறுவனத்தின் உரிமையாளர் முரளிதரன் இம்முயற்ச்சியை மேற்கொண்டுள்ளார்.
அம்முயற்சியின் காரணமாக எதிர்வரும் ஜூன் மாதம் 27 ஆம் தேதி மகாகவி பாரதியாரின் 125வது திருமண நாளில் கடையத்தில் பாரதி மற்றும் செல்லம்மாள் இருவரும் இணைந்து இருப்பது போல் உள்ள திருவுருவச்சிலை நிறுவ முடிவெடுக்கப்பட்டது, அதற்கான தோற்றமாக செல்லம்மாவின் தோளில் பாரதி கை வைத்திருப்பது போன்ற காட்சி வடிவமைக்கப்பட்டது. பாரதி செல்லம்மாள் 7 அடி உயர சிலை வடிவமைப்பிற்கான பணியை கடந்த 4 ஆண்டுகளாக செய்து வந்த சிற்பி சுரேந்திரநாத் அதன் பணி முழுமையாடைந்த தை தொடர்ந்து அவரது இல்லத்திலிருந்து பாரதி செல்லம்மாவின் சிலை அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டு சேவாலயா சேவை மையத்துக்குச் கொண்டு வரப்பட்டது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட ரத யாத்திரையை மகாகவி பாரதியின் தங்கையின் கொள்ளு பேத்தி கவிஞர் உமாபாரதி, புவனேஸ்வரி சுப்பிரமணியம், ஹரிஹரன், சாம்பமூர்த்தி மற்றும் எள்ளு பேத்தி சாதனா பிரசன்னா பிரபல ஓவியர் ஜெயராஜ், மர சிற்பி அப்பர் லக்ஷ்மணன் மற்றும் சேவாலயா தொண்டு நிறுவனர் முரளிதரன் ஆகியோர் கொடியசைத்து ரத யாத்திரையை துவக்கி வைத்தனர்.
இந்த யாத்திரையானது கசுவா சேவாலயத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக ஜூன் 1ம் தேதி கடையம் சென்றடையும். முன்னதாக மாணவ மாணவிகளின் நடனம் மகாகவி பாரதி கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாரதியாரின் கொள்ளுப்பேத்தி உமா பாரதி பரிசுகளை வழங்கினார்
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்தார்.
அதுக்குறித்து மகாகவி பாரதியாரின் தங்கையின் வழி கொள்ளுப் பேத்தி உமா பாரதி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் அனைத்து இடங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் மேலும் இந்த மாதம் 14ஆம் தேதி ஆளுநர் மாளிகையிலும் மகாகவி பாரதியார் சிலை நிறுவி இருக்கிறார்கள் என்பதை அறியும் போது, அது பாரதியின் வம்ச வழியில் பிறந்த எங்களுக்கு மகிழ்ச்சி கொள்ளும் படி இருப்பதாகவும்,
மேலும், உலகத்திலயே முதல் முறையாக பாரதியுடன் அவரது மனைவி செல்லம்மாளும் சேர்ந்து இருப்பது போல் முதன்முறையாக சிலை நிறுவியது எங்களுக்கு மிக மகிழ்ச்சி தருவதாகவும், இது சேவாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் முரளிதரனனின் மனதில்தான் தோன்றிவுள்ளது என தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசுக்கு மகாகவி பாரதியின் குடும்பத்தினர் வேண்டுதலாக கேட்டுக்கொள்வது என்னவென்றால் பாரதியின் தமிழ் உலகெல்லாம் பரவ வேண்டும் என்றும் பாரதியின் புகழ் எவ்வாறு பாடத்திட்டத்தில் மூலமாக சில பாடல் சேர்க்கப்பட்டு இருக்கிறதோ ! அதுமட்டும் இல்லாமல், அவரது கட்டுரைகள், கதைகள், சிறுகதைகள், மற்றும் அவரது வசனம் அவரது அறிவியல் பார்வைகள் இவையெல்லாம் அடுத்த தலைமுறையினருக்கு போய் சேர வேண்டும். இதற்கு தமிழக அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். இதற்காக அரசாங்கத்திற்கு பாரதியின் வம்சவழியான நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.