கும்பகோணம், பிப். 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடை மருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருத்தவக் குடி எனும் கிராமத்தில் நூற்றாண்டு பழமையாக இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முந்தையா திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மறைந்த அமைச்சர் கோ.சி. மணி காலத்தில் பழையக் கட்ட டத்தை தகர்த்திவிட்டு புதியக் கட்டடம் 1990 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகவும், இந்நிலையில் அது தற்போது, வலுவிழந்த நிலையில் அக்கட்ட டம் 34 ஆண்டுகளுக்கு பின்பு மறு கட்டமைப்புக்காக இடிக்கப்பட்டுள்ளதாக அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்போது அப்பள்ளியில் தலைமையாசிரியர் துணை ஆசிரியர் மட்டுமே உள்ள நிலையில் அப்பள்ளியில் 45 மாணவர்கள் கல்விப் பயின்று வருவதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அத்தொடக்கப் பள்ளி கடந்த ஆகஸ்ட் மாதம் 2023 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆன நிலையிலும் தற்போது வரை அப்பள்ளி கட்டட கட்டுமான பணிக்கான எவ்வித நடவடிகைகயும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல் போல் நிசப்தத்துடன் உள்ளதாக அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இது ஒரு பக்கம் இருக்க அப்பள்ளி மாணவர்கள் தொடர் கல்விப்பயில மாற்று இடமும் இதுவரை ஏற்படுத்தி தராமல் உள்ளூர் மற்றும் ஒன்றிய மேலும் மாவட்ட கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகவும் எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இப்பிரச்சினை தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளான  தொகுதி (திருவிடைமருதூர்) சட்டமன்ற உறுப்பினரும், அரசின் தலைமை கொறடாவுமான கோவி செழியன், மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்  இராமலிங்கம், மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்  கல்யாணசுந்தரம் ஆகியோரிடம் நேரில் சென்று மனுவளித்தும் அதற்கான உரிய நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவில்லை என மேலும் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அப்பள்ளியினை தற்காலிகமாக ஏற்கனவே இருந்த பள்ளியின் அருகே இருந்த திரௌபதியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள தகர செட்டுகளில் தற்காலிமாக இயங்கி வந்ததாகவும், மீண்டும் அதற்கும் பிரச்சினை வந்துள்ளதாகவும் தற்போது அதில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய நெல் மூட்டைகள் அடுக்கி வைக்க தேவைப்பட்டதால், குழந்தைகளும், ஆசிரிய பெருமக்களும் சுவற்றில் அடித்த பந்தை போல மீண்டும் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்து அங்குள்ள மரநிழலில் பள்ளியை செயல்படுத்தி வருகின்றனர்.

அத் தகவலிறிந்து வந்த ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம க ஸ்டாலின், அக்குழந்தைகள் பாதுகாப்பாக கல்வி கற்க ஏதுவாக, தற்காலிக ஏற்பாடாக, பள்ளி வளாகத்திற்கு அருகேயுள்ள தனியார் கட்டிடத்தின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டகையில் இயங்க சம்மந்தப்பட்ட தனியாரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. கல்வித்துறை அலுவலர்களின் அனுமதியோடு பள்ளி தற்காலிகமாக அங்கு இயங்கி வருவதாக தெரிவிக்கின்றனர். இருப்பினும் தற்போது வெயில் காலம் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

எல்லோர்க்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் எனும் தத்துவத்தின் அடிப்படையில் திராவிடமாடல் ஆட்சியை நடத்தி வரும் முதலமைச்சரின் அரசுக்கு மக்களிடையே இதுப்போன்ற பிரச்சினைகளால் மக்களிடம் இருக்கும் நல்ல எண்ணம் மாறத் தொடங்கிவிடும் என்பதை அரசு கவனம் கொள்ள வேண்டும் என அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இனியும் தாமதிக்காமால் இப்பிரச்சினைக் குறித்து விரைவான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here