தஞ்சாவூர், மே. 16 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த  ஆண்,  பெண் மற்றும் குழந்தை ஆகிய மூன்று நபர்கள் இருதய தடுப்பு சுவர் இல்லாத பிறவி குறைபாடு உடையவர்கள் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் இவர்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் கேத்லேப் மூலம் இருதய குறை பாடை வெற்றிகரமாக அரை மணி நேரத்தில் சரி செய்யப்பட்டுள்ளது.

கேத்லேப் சிகிச்சை மூலம் தற்போது வரை நான்கு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேருக்கு இருதய சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 4000 நபர்களுக்கு இவ்வித இருதய அவசர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ் அரிதான சிகிச்சையினை சென்னை மற்றும் கோவைக்கு அடுத்தபடியாக தஞ்சை அரசு மருத்துவமனையில் தற்போது செய்யப்பட்டுள்ளது. மேலும் அச் சிகிச்சையினை தனியார் மருத்துவமனையில் செய்ய வேண்டும் எனறால் இரண்டு முதல் மூன்று லட்ச ரூபாய் வரை செலவாகுவதோடு 15 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டிய நிலையும் ஏற்படும் என்கின்றனர் அரசுத் தரப்பு மருத்துவ வட்டாரங்கள், ஆனால் தற்போது அரை மணி நேரத்தில் வெற்றிகரமாக நடைப்பெற்ற இந்த சிகிச்சையினை காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப் பட்டுள்ளது.

 

மேலும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரக்கூடிய காய்ச்சல் நோயாளிகள் பரிசோதனை செய்யப்பட்டு டெங்கு காய்ச்சல் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் அந்த அளவிற்கு டெங்கு பாதிப்பு இல்லை டெங்கு பாதிப்பு ஏற்படுமேயானால் அவர்களுக்கு தேவையான தனி வார்டு மற்றும் மருந்துகள் தேவையான அளவு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கையெழுத்து உள்ளது.

எல்லோ பீவர் தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை எந்த ஒரு பாதிப்பும் இல்லை கேரளாவை ஒட்டிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேட்டி : மருத்துவர். பாலாஜி நாதன் தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here