பொன்னேரி, மார்ச். 26 –
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டம், மாவட்ட பட்டியல் அணி தலைவர் ராஜன் தலைமையிலும், மாநில பட்டியலணி செயலாளர் அன்பாலய சிவகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது.
மேலும் இக் கூட்டத்தில், மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாநில அரசுத்துறை தலைவர் பாஸ்கர் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக பங்கேற்று, கட்சியின் வளர்ச்சி குறித்தும் பட்டியல் அணியின் பணிகள் குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிலர் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.
மேலும், மாவட்டச் செயலாளர்கள் நந்தன், பொன்.பாஸ்கர், கோட்டி, பட்டியல் அணி நிர்வாகிகள் இளங்கோ, பொன்னேரி நகர பட்டியல் அணி தலைவர் ஹரிதாஸ், வழக்கறிஞர் பிரிவு கௌதமன், பொன்னேரி நகர மகளிர் அணி தலைவர் ராகிணி உள்ளிட்டவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.