திருவண்ணாமலை ஜூலை.18- உலகம் முழுவதும் நற்பெயரை பெற்றுள்ள பஜாஜ் மோட்டார் சைக்கிள் நிறுவனம் உயர்ந்த தரம் மற்றும் உயந்த தொழில் நுட்பத்துடன் மோட்டார் சைக்கிள்களை தயாரித்து வருகிறது.
அந்த வகையில் சிடி 110 எக்ஸ், என்எஸ் 125 மோட்டார் சைக்கிள்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிறப்பான ஸ்டைலிங்கோடு வந்துள்ள சிடி 110 எக்ஸ் பைக் நீலம் கருப்பு, சிவப்பு கருப்பு, கருப்பு பச்சை மற்றும் கோல்டன் மற்றும் சிவப்பு ஆகிய நான்கு டூயல்-டோன் வண்ணங்களில் கிடைக்கிறது. பெரிய இன்ஜின் கார்டு மற்றும் சம்ப் கார்டு ஆகியவையுடன் ஒரு ஹெட்லேம்ப் கௌல், பின்புறத்தில் 7 கிலோ எடையைத் தாங்கக் கூடிய லக்கேஜ் மற்றும் பல சிறப்பம்சங்கள் உள்ளது.
என்எஸ் 125 பைக் ஆரஞ்சு, நீலம், சிவப்பு, கிரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. 12 லிட்டர் பெட்ரோல் டேங்க், 124சிசி, ஏர்-கூல்டு என்ஜின், 5 ஸ்பீடு கியர் 144 கிலோ எடை மற்றும் பல்சர் என்எஸ் 200 மற்றும் பல்சர் என்எஸ் 160 பைக்குகளின் டிசைனை கொண்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை விரும்பும் இளம் தலைமுறையினரை இந்த மாடல் பைக்குள் கவர்ந்துள்ளது.
மேற்கண்ட 2 மாடல் பைக்குகளின் அறிமுக நிகழ்ச்சி திருவண்ணாமலை அடுத்த மங்கலத்தில் உள்ள சாயர் மோட்டார்ஸ் ஷோருமில் நடைபெற்றது. நிர்வாக இயக்குநர் இ.லோகேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். சிடி 110 எக்ஸ் விற்பனையை மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் இரா.ஜானகிராமனும், மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசனும், என்எஸ் 125 பைக் விற்பனையை வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.பி.ராஜா, இந்தியன் வங்கி மேலாளர் ராகுல், தொழிலதிபர் பி.ராஜேஷ் ஆகியோரும் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஐ.சி.ஐ.ஐ.சி வங்கியின் மண்டல மேலாளர் ராஜீவ்காந்தி, எச்.டி.எப்.சி வங்கியின் விற்பனை மேலாளர் மணிகண்டன், கோடாக் வங்கியின் துணை மேலாளர் ஏ.இளையராஜா, நிதி நிறுவனத்தைச் சேர்ந்த பி.பிரேம்குமார், கலைராசன் மற்றும் சாயர் நிறுவனத்தைச் சேர்ந்த டி.மகாவீர் குமார், டி.எம்.விவேக் குமார், டாக்டர் அரவிந்த் குமார், டி.எம்.தர்சன் குமார், டி.ஜி.கணேஷ் கவுரவ் உள்பட வியாபாரிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here