கும்பகோணம், மார்ச். 09 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அன்னை கல்வி குழுமம் சார்பில் புற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கக்கூடிய வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்தும், மேலும் கருப் பை மற்றும் வாய் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதுக் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைப்பெற்றது.

அப்போட்டி அரசு போக்குவரத்து கழக வாயில் முன்பு தொடங்கி ரயில் நிலையம், மகாமகம் குளம், உச்சிப்பிள்ளையார் கோவில், காந்தி பூங்கா, மடத்து தெரு, பாலக்கரை, அரசு மருத்துவமனை, நால் ரோடு வழியாக அரசு போக்குவரத்து கழகத்தில் நிறைவு பெற்றது. அந்த மாரத்தான் போட்டி அன்னை கல்வி குழுமம் தலைவர் அன்வர் கபீர் தலைமையில் நடைபெற்றது.

மேலும் அப்போட்டியை அறநிலையத் துறை துணை ஆணையர் சாந்தா, குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆனந்தி, ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். அதில் மிஸ்டர் இந்தியா பாடிபில்டர்,  விழிப்புணர்வு பேச்சாளர் ராஜாபேரோன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் 4 பிரிவுகளாக நடைபெற்ற அப் போட்டியில் முதல் பரிசு ரூ 5000, இரண்டாம் பரிசு ரூ 4000, மூன்றாம் பரிசு ரூ 3000, மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

அதில் வெற்றி பெற்றவர்களுக்கு அன்னை கல்வி குழுமம் துணை தலைவர் மருத்துவர் எகியாநயிம், கலந்து கொண்டு பரிசு தொகையை  வழங்கினார். தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்டு அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. அப்போட்டியில் 1500 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று மேலும்அந்நிகழ்வினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here