ஆவடி, ஜன. 15 –

ஆவடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட மீஞ்சூர் வண்டலூர் விரைவு நெடுஞ் சாலையில், சரக்கு வாகனம் நெடுஞ்சாலையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கம்பத்தில் நேற்று நள்ளிரவு மோதி விபத்துக்குள்ளானது.

மீஞ்சூர் – வண்டலூர் விரைவு நெடுஞ் சாலையில் உள்ள, பாலவேடு சுங்கச்சாவடி அருகே, நேற்றிரவு சுமார் 1 மணியளவில் வந்த சரக்கு வாகனம், அப்பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த உயர் கோபுர மின் விளக்கு மீது திடீரென மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த வாகனத்தில் சென்ற ஓட்டுனர் உட்பட மூன்று பேர் அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இவ்விபத்து குறித்து தகவலறிந்து அங்கு வந்த போக்குவரத்து காவல்துறை காவலர்கள் விபத்துக்குறித்து இவ்வாகனம் எங்கு இருந்து வருகிறது. யாருக்கு சொந்தமானது, மற்றும் சரக்குகளுடன் வாகனம் விபத்துக்குள்ளானதா இல்லை சரக்கு இறக்கி விட்டு செல்லும் போது விபத்து நடந்ததா .. விபத்து நடந்ததற்கான காரணம் என்ன என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.   

மேலும், தொடர் வேலை பலுவால் ஓய்வின்றி ஓட்டுனர் வேலையில் ஈடுப்பட்டதால் வாகனம் ஓட்டும் போது கண் அயர்ந்து விட்டதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இரவு நேரம் என்பதால் அதிக போக்குவரத்து இல்லாததால், பெரியதாக போக்குவரத்து பாதிப்புக்கள் ஏதும் நடைப் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here