கும்பகோணம், ஜூன். 08 –
கும்பகோணம் அருகேவுள்ள ஆரியப் படை வீடு ஊராட்சி மன்ற உறுப்பினர் சந்தானமேரி (38) கந்துவட்டி கொடுமையால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் தெரிவிக்கிறது. இதுக்குறித்து பட்டீஸ்வரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரியப்படைவீடு ஊராட்சி மன்ற உறுப்பினரான பாமகவை சேர்ந்த சந்தானதேவி (38), இவரது கணவர் மாசிலாமணி கம்பி பிட்டர் பணி செய்து வருகிறார்.
இந்நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு மாசிலாமணி என் சகோதரி திருமணத்திற்காக அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவரிடம் ரூபாய் ஒரு லட்சம் கடனாக பெற்றுள்ளனர். அதற்கு கடந்த ஆறு மாதம் முன்பு வரை ரூபாய் ஒரு லட்சம் வரை வட்டியாக சரியாக செலுத்தியதுடன் மேலும், அக்கடன் தொகைக்காக தங்களது ஒரு லட்ச ரூபாய் சீட்டை எடுத்து அதனையும் முழுமையாக ஐயப்பனிடம் கொடுத்துள்ளதாகவும், இந் நிலையில் இன்னும் கடன் தொகை அடையவில்லை எனவும், மேலும் ரூபாய் 2 லட்சம் வரை பணத்தை கேட்டு தொடர்ந்து இரவு நேரங்களில் அலைபேசியில் தொடர்பு கொண்டு தொந்தரவு தந்துள்ளதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நீங்கள் கையொப்பமிட்ட காசோலை என்னிடம் உள்ளது அதில் 5 லட்சம் வரை நான் பூர்த்தி செய்து கொண்டு நீங்கள் 5 லட்சம் கடன் பெற்று உள்ளீர்கள் என கூற முடியும் என மிரட்டியதாகவம், அதனால் மன உளைச்சலுக்கும் ஆளான சந்தானதேவி வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்து குடித்து வீட்டில் மயங்கி விழுந்து உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சந்தானம் மேரியை 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரது குடும்பத்தினர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து பட்டீஸ்வரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கந்து வட்டி கொடுமையால் ஊராட்சி மன்ற உறுப்பினர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கும்பகோணம் மற்றும் ஆரியப்படைவீடு ஊராட்சி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.