கோயம்பேடு, ஏப். 05 –
சென்னை கோயம்பேடு அருகேவுள்ள நெற்குன்றம் பட்டேல் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ராஜா மொய்தீன், மேலும் இவருக்கு சொந்தமான இரண்டடுக்கு கட்டிடத்தில் கீழ் தளத்தில் ஏ.டி.எம். மற்றும் பைகள் விற்பனை செய்யும் கடைக்கும் வாடகைக்கு விட்டு உள்ளார்.
மேலும் அதேக் கட்டிடத்தின் மேல் தளத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் இந்நிலையில், இன்றிரவு திடீரென அந்த ஏடிஎம் மையத்தில் தீடீரென தீப்பற்றி மளமளவென எரியத்தொடங்கியது.
இவ்விபத்தினால் அத்தீ அருகேவுள்ள பைக்கடை மற்றும் மேல் தளத்தில் உள்ள அவரது வீட்டிற்கும் பரவத் தொடங்கியது. இதனால் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் ஏடிஎம் அருகே இருந்தவர்கள் தலைத் தெறிக்க அங்கிருந்து தப்பித்து அலறிக்கொண்டு ஓடினார்கள்.
மேலும் இவ்விபத்து குறித்து கோயம்பேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வெகு நேரம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயுடன் போராடி தீயை அணைத்தனர்.
மேலும் இவ்விபத்தில் ஏடிஎம் மையம் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது மேலும் தீயானது அருகில் இருந்த பைகள் தைக்கும் கடை மற்றும் வீட்டிற்கு. பரவியதால் அங்கும் லேசான தீ விபத்து ஏற்பட்டது. மேலும் இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஏடிஎம் மையத்தில் இருந்த ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவ்விபத்தினால் ஏடிஎம் இயந்திரத்தில் எவ்வளவு பணம் இருந்தது, என்பது உள்ளிட்ட முழுமையான தகவல்கள் காவல்துறையினரின் தெடர் விசாரணையின் நிறைவில் தெரிய வரும் என காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் வட்டாரம் தெரிவிக்கிறது.
மேலும் அருகேயிருந்த பை கடை மற்றும் கட்டிட உரிமையாளரின் வீட்டில் தீயினால் ஏற்பட்ட சேதமும் எவ்வளவென்று இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.