திருவாரூர், பிப்.26 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்…

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், நெய்குப்பை கிராமத்தில் அமர்ந்து அருள் தரும் ஸ்ரீ ஆதி விநாயகர் ஸ்ரீவரசித்தி விநாயகர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஸ்ரீ அகோர வீரபத்திர சாமி ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயங்களில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது.

மஞ்சக்குடியில் அவதரித்த பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சாமிகளின்  குலதெய்வமாக விளங்கும் இவ்வாலயம் உலகம் முழுவதும் மருளாளிகளை கொண்ட ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில்  ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டு அஷ்ட பந்தனம் செய்யப்பட்டு நான்கு கால யாக பூஜைகளின் துவக்கமாக சென்ற  23ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனுக்ஞை,  விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி நான்கு கால யாக பூஜைகள் சிறப்பான முறையில் நடைபெற்று, நான்காம் கால யாக பூஜையின் நிறைவு  மகாபூர்ணாஹூதியடன்  மகா தீபாராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் அடங்கிய அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது. அதன் பிறகு வேத மந்திரங்கள் முழங்க ஒரே நேரத்தில் ஸ்ரீ வர சித்தி விநாயகர் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஸ்ரீ ஆதி விநாயகர் ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஸ்ரீ அகோர வீபத்திரசாமி மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மூலவ தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் தொடர்ந்து மூன்று நாட்களாக அன்னதானம் வழங்கப்பட்டது இன்றும் அன்னதானம் வழங்கி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here