கும்மிடிப்பூண்டி, ஏப். 12
திருவொற்றியூர் பகுதியில் சென்ட்ரிங்க வேலை பார்த்து வருபவர் ஸ்டாலின் (36) இவருக்கும் கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள சிறுவாபுரி பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் கடந்த பத்து வருடத்திற்கு முன்பாக திருமணம் நடந்து. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையன்று சிறுவாபுரியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார்.
வந்த இடத்தில் கோயில் குளக்கரையோரமாக நடந்து சென்ற அவர் நிலைதடுமாறி குளத்தில் தவறி விழுந்துள்ளார். தற்போது கோயில் கும்பாபிஷேக பணிக்காக குளம் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரம்பி உள்ளதால் அவர் விழுந்தவுடன் சேற்றில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்த நிலையில் அவர் இறந்து விட்டதாக தெரிய வருகிறது. இத் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி போலீசார் அவ்விபத்துக் குறித்து விசாரணை மேற்கொண்டு அவரது உடலை பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து தொடர் விசாரணையை ஆரணி காவல்நிலைய போலீசார் மேற்கொண்டு வருகின்றார்