ஆரணி, மார்ச். 12 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் ஆரணி பேரூராட்சியில் உள்ள எம்.பி.எஸ். விவேகானந்தா பள்ளி பேருந்து ஓட்டுனராக பணிபுரியும். பி.மண்ணார் என்பவரின் மகன் எம்.வாசுதேவன் இவர் ராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடியில் உள்ள ஆயிரம் வைசிய பள்ளியில் 40வது தமிழ் நாடு மாநில சிலம்பம் ஜூனியர் சேம்பியன் ஷிப் போட்டியில் திருவள்ளூர் மாவட்ட சார்பில் (42-46 எடைப்பிரிவில்) கலந்து கொண்டு முதல் பரிசு (கோல்ட் மெடல்) வென்றுள்ளார்.
தந்தை பணிபுரியும் பள்ளியில் நமது பாரம்பரிய கலையான சிலம்பம் கலையை ஐந்து ஆண்டுகளாக சகா சிலம்ப கூட தலைவர் ராஜேந்திரா ஐயா மாஸ்டர்கள் தர்மராஜ். கார்த்திக். கோபி. ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். அவர்களிடம் பயிற்சி பெற்ற எம்.வாசுதேவன் மாநில அளவில் வெற்றி பெற்று நேஷனல் அளவில் செல்கிறார்.
எம்.பி.எஸ் விவேகானந்தா பள்ளி தாளாளர் எம்.பி சாந்தம்மாள் நமது பள்ளியின் முன்னாள் மாணவன் எம்.வாசுதேவன் சிலம்பத்தில் மாநில அளவில் முதல் பரிசு (கோல்ட் மெடல்) பெற்றதை மகளிர் தினக் கலைநிகழ்ச்சி அன்று பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
எம்.வாசுதேவன் தற்பொழுது பதினோராம் வகுப்பு படித்து வருகிறான். சிலம்பத்தில் மாநில அளவில் வெற்றி பெற்ற இவருக்கு எம்.பி.எஸ். விவேகானந்தா பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர், தாளாளர். ஆரணி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள். கவரைப்பேட்டை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர் அனைவரும் பாராட்டி நேஷனல் லெவலில் வெற்றி பெற வாழ்த்தினார்கள்.