திருத்தணி, ஜூன். 24 –

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காந்தி ரோடு பகுதியில் அமைந்துள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்விற்கு திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி., அனுமந்தன் தலைமையேற்று வழி நடத்தினார். அப்போது மாணவர்களிடையே உரை நிகழ்த்தும் போது, போதைப் பழக்கத்திற்கு அடிமையானால் அவர்கள் வாழ்க்கை சீரழிவதை விட, அவர்கள் குடும்பமும் சீரழியும் எனவும் மேலும், அதனால் கேன்சர் போன்ற கொடிய நோய்களுக்கு உட்பட்டு, உயிர் இழப்பும் ஏற்படும் என்றார்.

மேலும் போதை பொருட்கள் விற்கும் நபர்கள் குறித்து மாணவர்களுக்கு தெரிய வந்தால், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தகவல் தெரிவிக்கும் படி வேண்டுகோள் விடுத்தார்.

அதனைத்தொடர்ந்து, பள்ளியில் இருந்து போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாணவர்கள் கையில் பதாகைகள் ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் முழக்கங்கள் எழுப்பியவாறும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட திருத்தணி சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் (பொ) தேவிகா மற்றும் காவலர்கள் இப்பேரணியில் திரளாக வந்திருந்து ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

 

தம்பட்டம் நாளேடு செய்திகளுக்காக திருத்தணியில் இருந்து திருவள்ளூர் செய்தியாளர் சாய் கிரண்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here