அண்டசராசரங்களுக்கும் ஆதி நாயகியான அம்பாளின் அவதார மகிமையை அளவிட முடியாது. அம்பாள் கைலாயத்திலிருந்து சுயம்புவாக வடிவம் கொண்டு, அங்காள பரமேஸ்வரியாக அடிவைத்த முதல் இடம் மேல்மலையனூர். இரண்டாவது இடம் ஆவடி. 1964-ம் ஆண்டு சித்திரை திருவாதிரை அன்று சுயம்பு ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயமாக தோன்றிய பிரார்த்தனை தலம் இதுவாகும்.
இந்த ஆலயம் தற்போது புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷே ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. விளம்பி வருடம், மாசி மாதம் 29-ம் நாள் 13.3.2019 (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு மேல் 11.00 மணிக்குள்ளாக ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தர் சுவாமிகள் மற்றும் மாரிதாஸன் சுவாமிகள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல்கள் :
9.3.2019 அன்று யாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. அன்றைய தினம் குருவந்தனம், விக்னேஷ்வர பூஜை, கிராம தேவதை அனுக்ஞை, ஸ்ரீ வாஞ்சாகல்ப மஹா கணபதி ஹோமம் ஸ்ரீ ரக்தூள் அங்காள பரமேஸ்வரி மூலமந்திர ஹோமம் கோபுர கலச பூஜை, மஹா தீபாராதனை பிரசாத விநியோகம் நடைபெறுகிறது. மாலையில் நவரத்தின யந்திர பிரதிஷ்டை ஸ்ரீ ரக்தூள் பரமேஸ்வரி பிரதிஷ்டை வாஸ்து சாந்தி, சப்த கனயகா பூஜை ஷோடச சுமங்கலி பூஜை நடைபெறுகிறது.
10-ம் தேதி அன்று கோபூஜை, தன பூஜை ஏகாதச ருத்ரஹோமம் ஸ்ரீ சுதர்தன ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம், த்ரவ்யாஹூ ஹோமம், தீபாரதனையும், மாலையில் கிராம சாந்தி, சாந்தி ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம், துர்கா சப்தசதீ பாராயணமும் நடைபெறுகிறது.
11-ம் தேதி காலையில் நவகிரஹ ஹோமம் அக்னி ஸங்கிரஹனம், தீர்த்த சங்கரஹணம், ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், மஹாதீபாராதனை பிரசாத விநியோகமும், மாலையில் விக்னேஷ்வர பூஜை, புன்யாஹவாசனம், யாகசாலை பிரவேஷம், முதல்கால யாக பூஜையும் நடைபெறுகிறது.
12-ம் தேதி விசேஷசந்தி, பாவனாபிஷேகம், இரண்டாம் கால யாகபூஜை, மஹா தீபாராதனையும், மாலையில் விசேஷசந்தி, பாவனாபிஷேகம், வேத பாராயணம், மூன்றாம் கால யாக பூஜை, 1008 தாமரை புஷ்பத்தால் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை, கோபூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், இரஜதபந்தன சாற்றுதல், மஹா தீபாராதனையும் நடைபெறுகிறது.
13-ம் தேதி நான்காம் கால யாக பூஜை, கோபூஜை, கஜ பூஜை, அஷ்வ பூஜை, நாடீசந்தானம், தத்வார்ச்சனை, நாமகரணம், நவகுண்ட பட்டுபுடவை வஸ்திர சமர்ப்பணம், ஜயாதி ஹோமம், க்ரஹப்ரீதி யாத்ரா ஹோமம், யாத்ராதானம், கலச புறப்பாடு, மூலஸ்தான விமான கோபுரம் மஹா கும்பாபிஷேகம், சுயம்பு அம்பாளுக்கு மற்றும் சப்த கன்னிகைக்கும் மூலஸ்தான அம்பாளுக்கும் மஹா கும்பாபிஷேகம், மஹா தீபாராதனையும், மாலையில் மஹாபிஷேகம் மண்டலாபிஷேகம் நடக்கிறது.
யாக சாலை 4 காலங்களிலும் கோபூஜை மற்றும் வேதம், ஆகமம், திருமுறை பாராயணங்கள் நடைபெறும்.
மஹாகும்பாபிஷேகத்தில் பூஜை செய்த பித்தளை கலசங்களை பக்தர்களுக்கு கொடுக்க இருப்பதால் ரூ.300 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற இருப்பதால் ஒருநாள் பூஜைக்கு ரூ. 2000 திருக்கோவிலில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.