கும்பகோணம், பிப். 26 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ அசைவ விருந்து நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு சமத்துவ விருந்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் திருச்சியில் நேற்று முன்தினம் 19 பேர் கொண்ட உயர்மட்ட குழு கூட்டம்  நடந்தது. அக்குழுவின்ர தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அந்த கருத்துக்களை தீர ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய கட்டத்திற்கு தற்போது நாங்கள் வந்து விட்டோம் எனவும், மேலும் இன்னும் ஒரு வாரத்திற்குள் தங்கள் கட்சியின் கூட்டணிக் குறித்த முடிவை அறிவிப்போம். என்றார்.

ஒற்றைக் கருத்து இருந்தால் உடனடியாக முடிவெடுத்திருக்க முடியும், ஒற்றை கருத்து இல்லாததால் எக்கூட்டணியில் பயணித்தால் இனி எடுக்கின்ற முடிவு சிறந்த முடிவாக இருக்கும். என்பதை தற்போது எங்கள் கட்சிக்கு இருக்கும் நிலையென்றார்.

மேலும் எங்கள் கட்சி தொடங்கி 16 ஆண்டுகள் கடந்து 17 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். இனி எடுக்கின்ற முடிவு வெற்றி முடிவாக இருக்கும். விவசாயிகள் என்ன கேட்கின்றனர் என்பதை டெல்லி அரசு செவி சாய்த்து கேட்டு அது குறித்து நியாயமானவற்றை உடனடியாக நிவர்த்தி செய்வதும், அவர்களுக்கு கருத்து சொல்ல வேண்டியிருந்தால் அதில் மாற்றுக் கருத்து இருந்தால் அதையும் விவரமாக எடுத்துச் சொன்னால் சிறப்பாக இருக்கும். என்றார்.

தமிழகம் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் தற்போது ரூ.8.33 லட்சம் கோடி கடனில் இருக்கிறது.. வரவு குறைவாகவும் செலவு அதிகமாகவும் இருக்கிறது அதற்கு முக்கிய காரணம் இலவசம் என்றார்.

மேலும் அரசுக்கு நிதிப் பற்றாக்குறை இருக்கும்போது இலவசம் கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை என்றார் மேலும் அதனால் ஒவ்வொரு தமிழக குடிமகன் தலையில் விழுந்த கடன் சுமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முற்போக்கு திட்டங்கள் என்ன என்றோ, மேலும்  இந்தந்த திட்டங்களால் 8.33 லட்சம் கோடியினை இன்னும் ஐந்து வாரத்தில் தீர்த்து வைக்க முடியும் என்ற திட்டத்தினை யாரும் வகுக்கவில்லை எனவும், தொழில் வளம், தொழிற்சாலை நிறுவனங்களை பெருக்க வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற உயர்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. என்றார்.

மேலும், கவர்னர், அரசு என்ன சொல்கிறதோ அதை கவனித்து உடனடியாக எந்த ஒரு கோப்பாக இருந்தாலும் அனுமதி தருவதுதான் அவருடைய வேலையெனவும், அதற்கு முட்டுக்கட்டையாக இல்லாமல் சுமுகமாக நடப்பதற்கு தமிழக அரசு எடுக்கின்ற முடிவுகளை அதனை விவரமாக பேசி உடனடியாக தீர்வு காணும் நிலையில்தான் கவர்னர் இருக்கிறார்.

மேலும் கூட்டணி குறித்து பேசி முடித்தவுடன் எத்தனை இடங்களில் நின்றால் நாம் வெற்றி பெற முடியும் என்ற இலக்கு வேண்டும். எந்த இயக்கத்துடன் கூட்டணி சேர்கிறோமோ அந்த இயக்கமும் வெற்றி பெற வேண்டிய சூழல் உருவாக வேண்டும். இவையெல்லாம் கலந்து பேசி முடிவு எடுக்க உள்ளோம்.

நிகழ்ச்சியில் கும்பகோணம் காங்கிரஸ் கட்சி மேயர் சரவணன், பாஜக மாவட்ட தலைவர் சதீஷ் உள்ளிட்ட எதிர், எதிர்க்கட்சியை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here