கும்பகோணம், ஜன. 10 –

கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை சுற்றியுள்ள படுகை நிலங்களான மேலஉத்தமநல்லூர், இலுப்பகோரை, மாத்தூர் திருச்சோற்றுத்துறை, வீரசிங்கம்பேட்டை ஆகிய பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வந்தி பூக்களின் அறுவடை  தீவிரமாக நடைபெற்று விற்பனைக்காக செவ்வந்திப் பூக்கள் தஞ்சாவூர் கும்பகோணம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு ஏலத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. இந்த ஏலம் தினசரி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும்.

அங்கு ஒரு கிலோ செவ்வந்திப்பூ ரூபாய் 80 வரை மட்டுமே விலை போகிறது. இது குறித்து விவசாயி தெரிவித்த போது தோட்டத்தில் உள்ள பூக்களை நாங்கள் பறித்து அதை மூட்டைகளாக வைத்திருப்போம். இதனையடுத்து தொழிலாளிகளுக்கு கூலி கொடுத்து பூ மூட்டைகளை வேனில் கொண்டு வந்தால் அதற்கு சரியான விலை கிடைப்பதில்லை. ஆகவே நாங்கள் மன வேதனையோடுதான் தருக்கிறோம்.

தற்போது  செவ்வந்தி பூ ரூபாய் 120 முதல் 150 வரை விலை போனால் மட்டுமே விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும் என  விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் வெளியூர்களிலிருந்து தஞ்சாவூர் கும்பகோணம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து பூக்கள் வருகையால் இந்த பகுதியில் இருந்து கொண்டு செல்லும் பூக்களுக்கு விலை குறைவாக உள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பூச்செடிகளில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here