திருவாரூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில்.. திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல்பெற்ற குரு பரிகார தலமாக விளங்கும் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் தென்முகக் கடவுளாக விளங்கும் தக்ஷிணாமூர்த்தியே குரு பகவானாக தனி சன்னதியில் அமையப்பெற்று அருள்பாலித்து வருகிறார்..
நவக்கிரகங்களில் உள்ள குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்கக்கூடிய இந்த ஆலயத்தில்.. இன்று (01.05.2024) மாலை 5.19 மணி அளவில் குரு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது..
மேஷம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார்…
குருபகவானுக்கு பால், சந்தனம், பன்னீர் மற்றும் திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.. தொடர்ந்து குரு பகவானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
குரு பெயர்ச்சியை முன்னிட்டு, ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், கன்னி, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தங்களது ராசிக்கு பரிகாரங்கள் செய்வதற்காக… நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தமிழகம் மற்றும் பல மாநிலங்களிலிருந்தும்.. ஏராளமான பக்தர்கள் வந்திருந்து.. சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
சுமார் 700 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பேட்டிகள்:
- சுந்தர்ராஜன் (பெங்களூரு)
- வனிதா (திருச்சி)
- தீபக் (கோயமுத்தூர்)
- மீனாட்சி (கும்பகோணம்)
- ராஜேஸ்வரி (சென்னை)