கும்பகோணம், பிப். 13 –

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில்  மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக அதிமுக அமமுக நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மையம் சுயேச்சைகள் உள்பட 275 வேட்பாளர்கள் களத்தில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இன்னும் சில தினங்களே தேர்தலுக்கு எஞ்சியுள்ளதால் தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வகையான நூதன பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், போட்டியிட்ட வேட்பாளர்கள், புரோட்டா கடையில் புரோட்டா சுட்டது, பஜ்ஜி சுட்டது, டீ போட்டது, இளநீர் வெட்டியது என ஏதாவது ஒரு விசயத்தை செய்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதே வழியை தற்போது பின்பற்றும் உள்ளாட்சி வேட்பாளர்கள், ஒரு படி… இல்லை… இல்லை… பல படி கீழே இறங்கி… என்னென்னமோ செய்கிறார். இப்போது நாம் பார்க்கவிருப்பது, அதிமுக வேட்பாளர் ஒருவரின் நூதன பிரச்சாரம் பற்றியது.மாநகராட்சிக்கு உட்பட்ட 43வது வார்டில், போட்டியிடும் வேட்பாளர் ஜெயந்தி ரவி மகாமக குளம் அருகில் உள்ள ஹோட்டலில் வாக்கு கேட்க சென்ற இடத்தில் திடீரென்று ஹோட்டலில் சப்பாத்தி போட்டு ரவா தோசை தோசை ஊற்றி நூதன முறையில் வாக்கு சேகரித்தார் தொடர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கிறார் இந்த பிரச்சாரத்தில் நகரச் செயலாளர் இராம ராமநாதன் மாணவரணி மாவட்ட செயலாளர் சரவணன் தகவல் தொழில்நுட்ப மண்டல பொறுப்பாளர் பாலாஜி வார்டு செயலாளர் ஜே ஜே ரவி மற்றும் நிர்வாகிகள் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோஷமிட்டபடி வாக்கு சேகரித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here