கும்பகோணம், ஜூலை. 08 –
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் கணவன் உயிரிழந்த செய்தி கேட்டவுடன் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆடுதுறை கஞ்சா மேட்டு தெருவில் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தமிழாசிரியர் புலவர் பழனி வேலன் (75) இவருக்கு திருமணம்மாகி ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார்.
மேலும் இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகளும் உள்ளனர் இவர்கள் அனைவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று வீட்டில் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக காலை மாலை நேரங்களில் வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சக்கரை நோயால் அவதிப்பட்டு கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்ச செய்தி அவரது மனைவிக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து அவரும் உயிரிழந்தார். இச் சம்பவத்தால் ஆடுதுறை பகுதி முழுமையும் பெருந்த சோகத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.