மயிலாடுதுறை, மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை அருகேவுள்ள ஆனந்த தாண்டவபுரம் கிராமத்தில் அமந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீசெல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விழா 31 ஆண்டுகளுக்குப் பிறகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை மனமுருகி வழிப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த ஆனந்ததாண்டவ புரத்தில் பழமை வாய்ந்த சப்த கன்னியர் செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது பழமை வாய்ந்த இந்த ஆலயம் சிதிலம் அடைந்த நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து இதனை புதிதாக மீண்டும் நிர்மாணம் செய்தனர். இதற்கான கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 18ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை உடன் துவங்கியது.
யாகசாலையில் புனித நீர் வைத்து பூஜிக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மகா பூர்ணாஹூதிக்கு பின்பு மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து செல்லியம்மன் மற்றும் சப்த கன்னியருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை செய்யப்பட்டது நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்