கும்பகோணம், ஜூன்.24 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்…

கும்பகோணம் அருகே மஞ்சமல்லி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பிரகன்நாயகி அம்பிகா, சமேத ஶ்ரீ மந்திரபுரீஸ்வரர், திருக்கோயில் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ ஜயனார், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவிடைமருதூர் தாலுகா, மஞ்சமல்லி கிராமத்தில் எழந்தருளி அருள்பாலிக்கும் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ பிரகன்நாயகி அம்பிகா, சமேத ஶ்ரீ மந்திரபுரீஸ்வரர் திருக்கோயிலில் சிவபெருமான் சூரனை  வெல்வதற்கு ஸ்ரீ முருகப் பெருமானுக்கு மந்திர பொருளை உபதேசம் செய்தருளினமையால் ஸ்ரீ மந்திரபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் திகழ்கிறார்.

மேலும் சிவ புண்ணியத்தால் வண்டு ஒன்று நாளும் சிவலிங்க திருமேனியை வழிபட்டு அருள் பெற்றதால் வண்டுபுரீஸ்வரர் என்னும் திருநாமமும் பெற்று விளங்குகிறார். முருகப்பெருமான் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி. பெருமானை வழிபட்டமையால் இங்குள்ள தீர்த்தம் கந்த தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

இத்தகைய சிறப்பு பெற்ற ஸ்தலத்தில் 15 ஆண்டுகளாக பிறகு மகா கும்பாபிஷேகம் செய்திட திட்டமிட்டு பல லட்சம் செலவில் பல மாதங்களாக நடைபெற்ற வந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 22 ஆம்  தேதி வெள்ளிக்கிழமை முதல் கால யாக சாலை பூஜைகள், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

நேற்று காலை பரிவார தெய்வங்களான ஸ்ரீ ஜயனார், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ செல்லியம்மன், ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 4 ஆம் கால யாகசாலை பூஜை நிறைவாக, மகா பூர்ணாஹதியுடன் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு  அதனையடுத்து, மந்திரபுரீஸ்வரர் திருக்கோயிலில் விமான கலசங்களுக்கும், சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில்  திருவாடுதுறை ஆதினம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here