சென்னை, ஆக. 29 –
தமிழ்திரைப்பட நடிகர் வடிவேலுவின் இளைய சகோதரர் ஜெகதீஸ்வரன் ( 52 ) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் அவரது மறைவினை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் வலுவேலுவை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு ஆறுதல் வழங்கினார்.
அப்போது, உடன் பிறந்த உற்ற துணையான தம்பியை இழந்து வாடும் தங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வடிவேலுக்கு ஆறுதல் தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கிறது.