பேராவூரணி, மே. 21 –

தம்பட்டம்செய்திகளுக்காக சாரு…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேவுள் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை இடிக்கும் போது, வணிக வளாகப் பகுதியில் உள்ள வாடகை பாத்திர கடையில் இருந்த சேர் மற்றும் பாத்திரங்கள் மீது சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. அதுக் குறித்து அக்கடையின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

பேராவூரணி அருகே குருவிக்கரம்பையில் ஊராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதன் அருகே ஊராட்சிக்கு சொந்தமான சுமார் 30 அடி உயரத்தில் பழுதடைந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தது.

இந்நிலையில் நேற்று திங்கள்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிக்கப்பட்டது. அப்போது அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது.. இந்நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி திடீரென இடிந்து அருகில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையில் விழுந்தது.

அதில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான வாடகை பாத்திர கடையில் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த 250க்கும் அதிகமான பிளாஸ்டிக் சேர்கள் மற்றும் அலுமினிய பாத்திரங்கள் சேதமடைந்தன இதுகுறித்து ராமசாமி பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பஞ்சாயத்துக்கு சொந்தமான கட்டிடத்தை எடுக்க உத்தரவிட்டது யார் ஊராட்சி நிர்வாகம் அல்லது ஒன்றிய நிர்வாகம் அனுமதி அளித்ததா என்ற ரீதியில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் நேற்றைக்கு தொட்டி இடிந்த விழுந்த போது அப்பகுதியில் ஆட்கள் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here