திருவள்ளூர், ஏப். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை  மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் மக்களவைத் தேர்தல் – 2024 முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பது அவசியம் குறித்த மூன்று சக்கர வாகன (ஸ்கூட்டர்) தேர்தல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார், அப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக காமராஜர் சிலை வரை நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்போம், எனது வாக்கு எனது எதிர்காலம், வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம், எனது வாக்கு எனது உரிமை, தவறாமல் வாக்களிப்பது வாக்காளர் கடமை, நமது இலக்கு 100 % சதவீதம் வாக்குப்பதிவு, தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா, ஓட்டுக்கு வாங்க மாட்டோம் நோட்டு என்ற பதாகைகளை ஏந்தி பொது மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது

மேலும் அதனைத் தொடர்ந்து 100% வாக்களிப்பது அவசியம் குறித்து உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்  தலைமையில் மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள்,

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.இராஜ்குமார்,  மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலர்  சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் சத்ய பிரசாத், மற்றும்  தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்  நலச்சங்கம் தலைவர் குலோத்துங்கன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here