கும்பகோணம், செப். 27 –

கும்பகோணம் அடுத்துள்ள கபிஸ்தலம் அருகே சோழங்கர்நத்தம் கிராமத்தில் வசிப்பவர் சண்முகம் மனைவி பேபி, இவர் தனது வீட்டிற்கு பின்புறம் தீபாவளிக்கு பயன்படுத்தக்கூடிய சிறுவகை சத்தம் எழுப்பும் வெடிகளை குடிசைத் தொழிலாக செய்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இத்தொழிலுக்காக இவரது உறவினர் கொட்டையூர் நடராஜன் மகன் ரவி வயது 45 என்பவரை வேலைக்கு அமர்த்தி உள்ளார். இந்நிலையில் அவர் இன்று மாலை வெடியினை தயார் செய்துக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு அமைக்கப்பட்டிருந்த அறை தீப்பற்றி எரிந்தது.

இதில் அங்கு பணிப் புரிந்து வந்த ரவிக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக  தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவாமல் இருக்க தீயில் தண்ணீர் பீச்சி அடித்து தீயினை அணைத்தனர்.

மேலும் இவ்விபத்தில் படுகாயம் அடைந்த ரவியை உடனடியாக சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ரவி தொடர்ந்து மருத்துவ மனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இவ்விபத்துக் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி, கபிஸ்தலம் காவல்துறை ஆய்வாளர்  அனிதா கிரேசி, மற்றும் காவல்துறையினர், பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, மண்டல துணை வட்டாட்சியர் பிரியா, வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி, ஆகியோர்  நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு  அரசு முன் அனுமதி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இத்தொழிலை செய்து வந்த அதன் உரிமையாளர் பேபி சண்முகத்தின் மகன் பிரபாகரன் வயது 40 என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here