பொன்னேரி, ஜன. 19 –

தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து, இன்று பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் கே எஸ் அழகிரி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஆணை பிறப்பித்திருந்தார்.

அவரின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும், காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் பகுதியாக இன்று, மாவட்டத் தலைவர் ஏ ஜி சிதம்பரம், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோரின் ஆலோசனைப்படி பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் டி.எல் சதாசிவலிங்கம். மாவட்ட செயலாளர் ஏலியம்பேடு பொன்.மகேஷ்.  நகர தலைவர்கள்  வழக்கறிஞர்கள் துரைவேல் பாண்டியன்.கார்த்திகேயன். உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் படியும், மேலும், தமிழ்நாட்டிற்கு எதிராக கொண்டு வரும் சட்ட திருத்தங்களை திரும்ப பெற கோரியும், .ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவினருக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பி அவருக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும், இதில் அத்திப்பட்டு புதுநகர் புருஷோத்தமன், அமரன், காமராஜ், பாலாஜி, வினோத்.சாம்ராஜ், உள்ளிட்ட மீஞ்சூர் பொன்னேரி சோழவரம் ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here