திருவள்ளூர், நவ. 04 –

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்துள்ள செஞ்சி அம்மன் நகர் பழங்குடி கிராமத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக மழை வெள்ளம் அப்பகுதியில் சூழ்ந்தது. இதனை அறிந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் தலைமையிலான கட்சியினர் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு நேரடியாக சென்று மழைநீர் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தலா ஐந்து கிலோ அரிசி மற்றும் மதிய உணவினையும் வழங்கினார்.

மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் செந்தில்குமாரிடம் கோட்டைக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களான தோனிரேவு, ஜமிலாபாத், செஞ்சி அம்மன் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பள்ளி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம், மேலும் அப்பகுதியில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா தேவாலயம் ஆகிய பகுதிகளுக்கு தொடர்ந்து பெய்து வரும் கனமழையில் செல்ல அப்பகுதியில் உள்ள ஆற்றின் குறுக்கே போடப்பட்டுள்ள தரை பாலத்தை கடந்து டாக்டர் அம்பேத்கர் நகர் வழியாக செல்கின்றனர்.

இச்சூழலில் அத்தரைபாலம் வடகிழக்கு பருவமழையின் போது மூழ்கி விடுவதால் இடுப்பளவு நீரில் பொதுமக்கள் சென்று வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தாங்கள் மிகவும் சிரமத்துடனும், ஆபத்தான நிலையில் அப்பாலத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே இத்தரைப் பாலத்தை சற்று உயர்த்தி அமைத்து தர வேண்டும் எனவும் இக்கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு தாங்கள் எடுத்துச் சொல்லி உடனடி நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வலியுறுத்தவேண்டும் என அப்போது பொதுமக்கள் சார்பில் அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட செஞ்சியம்மன் நகர் கிராம மக்களுக்கு தலா 5 கிலோ அரிசியும் மதிய உணவும் வழங்கினார். அப்போது பாஜக கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here