கும்பகோணம், ஆக. 18 –

கும்பகோணத்தில் கோகுலாஷ்டமி (எ) ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்து அசத்தினர். மேலும், ஆடல் பாடலுடன் பலவிதமான கலை நிகழ்ச்சிகளும், நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிடித்தமான பலவிதமான லட்டு, முறுக்கு, அதிரசம், சீடை, போன்ற உணவு பதார்த்தங்களுடன், வெண்ணெய் தயிர் வைத்து அவர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

கும்பகோணத்தில் கொரநாட்டுக் கருப்பூர் புறவழிச்சாலையில் அமைந்துள்ள கார்த்தி வித்யாலயா  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடபட்டது.  கிருஷ்ணர் அவதரித்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், நூற்றுக்கணக்கான அப்பள்ளியில் பயிலும் சின்னஞ்சிறு மாணவ, மாணவியர்கள் கிருஷ்ணர், ராதை போல வேடமணிந்து வந்த அழகு கிருஷ்ணரையும் ராதையையும் பார்வையாளர்களின் கண்முன்னே வந்து நிறுத்தியது.

மேலும், மேடையில் அலங்கரிக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலைக்கு மாலை அணிவித்து கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களான அதிரசம், சீடை, லட்டு, சர்க்கரைப்பொங்கல் வெண்ணெய், தயிர் ஆகியவற்றை வைத்து   அவர்கள் சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து கிருஷ்ணரை போற்றி பாடல்களை 2ம் வகுப்பு மற்றும் 3ம் வகுப்பு மாணவிகள் பாடினார்கள்  கிருஷ்ணரின் பாடலுக்கு 4ம் வகுப்பு மாணவ மாணவிகள் நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகளை பள்ளி குழும தலைவர் கார்த்திகேயன் மற்றும் பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா ஆகியோர் இணைந்து, வழங்கி பாராட்டினர்கள், இந்நிகழ்வில், ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here