திருவள்ளூர், சனவரி. 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்ட அனைத்து டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் அருகே ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் காஞ்சிபாடி சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மத்திய அரசு புதிதாக இயற்றியுள்ள ஹிட் அன்ட் ரன் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தற்போது உயர்த்தப்பட்டுள்ள வாகன வரிகளை குறைக்க வலியுறுத்தியும் உண்ணாவிரத த்தில் ஈடுப்பபட்டனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடுகின்ற வாகன ஓட்டுனருக்கு ரூபாய் 7 லட்சம் அபராதமும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தினை மத்திய அரசுக் கொண்டு வந்துள்ளது.
ஒரு வாகன ஓட்டுனருக்கு அந்த தொகை மிகவும் அதிகமான தொகையாகும் மேலும் 10 ஆண்டுகள் சிறை என்பது அவரது வாழ்வே கேள்விக்குறியாக மாறும் சூழ்நிலை உள்ளது. ஆகையால் இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும்,
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உடனடியாக சவுடு மற்றும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் எனவும் வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் போடும் பொய் வழக்குகளை தடை செய்ய வேண்டும் எனவபது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் டிப்பர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் சௌகார்பாண்டியன், காமராஜ், குமார், சுப்பிரமணி மனோகர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.. பொருளாளர் வெங்கட் நன்றி கூறினார்.