கும்பகோணம், டிச. 05 –

கும்பகோணம் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கார்னேஷன் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்குதல், ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரத்ததானம் வழங்குதல், மேலும் ஒராயிரம்  நபர்களுக்கு தொடர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, உதயநிதி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினை மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம் துவக்கி வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மாநகர துணை மேயர் சு.ப தமிழழகன், அவைத் தலைவர் வாசுதேவன், மாநகர பொருளாளர் ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர் வர்ஷா அழகேசன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here