கும்பகோணம், டிச. 31 –

கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும், மகாமகம் தொடர்புடைய 12 கோயில்களில் ஆருத்ரா தரிசனம் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைப்பெறுவது வழக்கம் அதுப்போன்று இந்த ஆண்டும் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கும்பகோணத்தில் குடந்தை மந்திரபீடேஸ்வரி பக்தர்கள் குழு சார்பில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு உற்சவங்கள், திருவிழாக்கள் ஆகியவற்றிற்கு உபயதாரர்களாக இருந்து செயல்படுத்தி வருகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசன தினத்தில் மகாமகம் தொடர்புடைய 12 கோயில்களில் சாக்கோட்டை திருக்கலையநல்லுார் அமிர்தகலசநாதர் கோயிலை தவிர மற்ற 11 கோயில்களான ஆதிகும்பேஸ்வர சுவாமி கோயில், நாகேஸ்வர சுவாமி கோயில், சோமேஸ்வரசுவாமி கோயில், ஆதிகம்பட்ட விஸ்வநாதசுவாமி கோயில், கவுதமேஸ்வர சுவாமி கோயில், அபிமுகேஸ்வர சுவாமி கோயில், காசி விஸ்வநாத சுவாமி கோயில், காளஹஸ்தீஸ்வர சுவாமி கோயில், பாணபுரீஸ்வர சுவாமி கோயில், கோடீஸ்வர சுவாமி கோயில், ஏகாம்பரேஸ்வர சுவாமி கோயில்களின் நடராஜ மூர்த்தி புறப்பட்டு ஆதிகும்பேஸ்வர சுவாமி கோயில் கீழரத வீதிக்கு காலை 10 மணிக்கு எழுந்தருளி நடராஜர் சந்திப்பு உற்சவம் நடத்தப்படுகிறது.

அன்று மதியம் 1 மணிக்கு அந்தந்த கோயில்களுக்கு நடராஜ மூர்த்தி திரும்பி செல்வார். இது தான் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு இவ்விழா சிறப்பாக நடைபெற உள்ளது. எனவும், அதற்கான முன் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை மேயர் தமிழழகன் ஒன்றிய செயலாளர் கணேசன் கும்பேஸ்வரன் கோவில் அலுவலர் கிருஷ்ணகுமார் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சரவணகுமார் வர்த்தக சங்கத் தலைவர் கே எஸ் சேகர் மின்சார துறை அலுவலர்கள் சிவாச்சாரியார்கள் சிவன் பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here