சென்னை:
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி விசால லட்சுமி(வயது 37). இவர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவில்பட்டி சென்றிருந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை நோக்கி புறப்பட்டார். ரெயில் நேற்று மாம்பலம் ரெயில் நிலையம் அருகே வந்தபோது விசால லட்சுமி இறங்குவதற்காக தனது உடைமைகளை எடுத்தார். அப்போது அவருடையை 72 பவுன் நகை வைத்திருந்த பெட்டி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மாம்பலம் ரெயில்வே போலீசாரிடம் விசால லட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.