ஈரோடு:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவர் ஈரோட்டில் பல்வேறு பகுதியில் மக்களை சந்தித்து பேசி வருகிறார்.
அதன்படி டி.டி.வி. தினகரன் ஈரோடு மரப்பாலம் நால்ரோடு பகுதிக்கு வந்துபொது மக்களை சந்தித்துபேசினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,-
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்திய நாட்டின் பிரதமரை தமிழக மக்கள் தான் முடிவு செய்வார்கள். எனவே பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தேர்தல் நெருங்கிவரும் நேரம் என்பதால் சிலர் பண மூட்டையுடன் உங்களை தேடிவருவார்கள். உஷாராக இருங்கள்.
தமிழகத்தில் முன்னேற்றம் தேவை. கல்வி, வேலை வாய்ப்பை பெற நீங்கள் (மக்கள்) அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.