மும்பை:

மும்பை அந்தேரியில் மெக்லியோட்ஸ் என்ற மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஸ்ரீநகர் கிளையில் ரியாஸ் அகமது வானி என்பவர் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவர் காஷ்மீரில் நடந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அந்த பதிவில் அவர், “இது தான் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக்” என கூறியிருந்தார். ஒட்டுமொத்த நாடே சோகத்தில் மூழ்கிய நிலையில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அந்த நபர் கருத்து பதிவிட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மும்பையை சேர்ந்த மருந்து நிறுவனம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட ஊழியரை பணி இடைநீக்கம் செய்து உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here