பட்டுக்கோட்டை, மே. 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

பட்டுக்கோட்டையில் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை லாவகமாக திருடி இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சிகள் இன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது – திருட்டு சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே ஆடுகளை திருடிய குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத்தெரு ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் சரண்யா (30) இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் தனக்கு சொந்தமான ஆட்டை கட்டி வைத்திருப்பது வழக்கம். இதையறிந்த மர்ம நபர் ஒருவர் அந்த தெருவில் யாராவது வருகிறார்களா? என்று சுற்றிப்பார்த்தார். அப்போது அந்த தெருவில் யாரும் வராத நேரத்தை பார்த்த அந்த மர்ம நபர் சரண்யா வீட்டில்

கட்டியிருந்த ஆட்டை லாவகமாக கையில் தூக்கிக் கொண்டு தெருவிற்கு வந்தார். அப்போது ஏற்கனவே அந்த மர்ம நபர் ஏற்பாடு செய்து வைத்திருந்த மற்றொரு மர்ம நபர் ஒரு இரு‌சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அந்த இருசக்கர வாகனத்தில் தான் திருடிய ஆட்டை லாவகமாக தூக்கிக்கொண்டு இருவரும் அந்த இருசக்கர வாகனத்திலேயே அங்கிருந்து தப்பித்து விட்டனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் பரவி சமூக வலைதளங்களில் வைரலாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே பட்டுக்கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு ஆட்டை திருடிய அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சிங் (32), சுரேஷ் (25) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஆட்டை பறிமுதல் செய்தனர். திருட்டு சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே ஆட்டை திருடிய குற்றவாளிகளை கைது செய்து, ஆட்டை மீட்ட காவல்துறையினரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here