திருவள்ளூர், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கசவநல்லாத்தூர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அக்கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ட்ரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது காரணமாக அப்பகுதி வாசிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை ட்ரான்ஸ்பார்மரை பழுது நீக்காமல் உள்ளதால் கசவநல்லாத்தூர் பகுதி கிராம மக்கள் கடந்த இரண்டு நாட்களாக இருளில் மூழ்கி இருந்ததாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் கசவநல்லத்தூர் நேருஜி நகர் பகுதி மக்களின் அடிப்படை தேவையான மின்சார வசதி 3 நாட்களாக இல்லாததாகவும், மற்றும் ஊராட்சி சார்பில் குடிதண்ணீர் கிடைப்பதற்கான முன்னேற்பாடுகள் ஏற்படுத்தி கொடுக்காததாலும் தாங்கள் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு அவதிப்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
அதனால் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் எனவும் மேலும் ,அப்பிரச்சினைகள் குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மேலும் அவர்கள் குற்றம்சாட்டு எழுப்புகின்றனர்.
அதனால் பொறுமையிழந்த தாங்கள் திருவள்ளூர் பேரம்பாக்கம் வழியாக காஞ்சிபுரம் செல்லக்கூடிய பிரதான சாலையில் குவிந்த கசவநல்லாத்தூர் நேருஜி நகர் பகுதி வாழ் மக்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அத்தகவலறிந்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தினார் அப்போது மின்வாரிய ஊழியரை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் அப்பகுதியில் இருந்து மின்சார ஊழியர் தனது இருசக்கர வாகனத்தில் ஓட்டம் பிடித்தார்.
மேலும் சாலையிலிருந்து கலைந்து செல்ல வற்புறுத்திய கடம்பத்தூர் போலீசாரிடமும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது . தண்ணீர் மின்சாரம் என அடிப்படைத் தேவைகளுக்காக சாலையில் சூழ்ந்த பொது மக்களால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக திருவள்ளூர் காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பேட்டி : செல்வி – கடம்பத்தூர் நேருஜி நகர்



















