ஊத்துக்கோட்டை, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால நீர்மோர் பந்தலை முன்னாள் பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சிறுனியம் பலராமன் மற்றும் முன்னாள் கும்மிடிபூண்டி சட்ட உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர் பானங்களை வழங்கினார்.
அதிமுக வின் பொதுச் செயலாளரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில் கோடை வெயிலின் தாக்கத்தை எதிர் கொள்ளும் வகையில் பொது மக்களுக்கு குளிர்ச்சியான பானம் மற்றும் பழங்களை வழங்க உத்தரவிட்டிருந்தார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான சிறுனியம் பலராமன் மற்றும் முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் ஆகியோர் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அதிமுக சார்பில் ஏற்பாடு செய்திருந்த நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்கள்.
கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் குளிர்ச்சியான நீர், மோர், தர்பூசனி , கிரினி பழம் நுங்கு மற்றும் குளிர்பானங்கள் என குளிர்ச்சியான பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயலாளர் ஷேக் தாவூத் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சியில் ஊத்துக்கோட்டை பேரூர் கழக நிர்வாகிகள் அவைத்தலைவர் அருணாச்சலம் மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணி அம்மா பேரவை செயலாளர் சக்திவேல் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சிவகுமார் டேவிட் முகமது சித்திக் பேரூர் கழக துணை செயலாளர் சுகுமாரன் ஜோதி பேரூர் கழக பொருளாளர் பாபு ஜாலி பெருமாள் கோபி நவீன் செல்வம் திருநாவுக்கரசு குமரேசன் சுரேஷ் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.






















