மயிலாடுதுறை, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், அச்சுதராயபுரம் கிராமம் இங்கு மிகவும் பழைமையான மிகவும் பிரசித்தி பெற்ற கிராம தெய்வமான கெளரி மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
மேலும் அக்கோயிலின் 57 – ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. அக்கோயிலை அப்பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இதனிடையே அத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தி. மீதி திருவிழா வெகுச்சிறப்பாக நடைபெறும்.
அதுப்போன்று இந்த ஆண்டு 57-ம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு, அக்கோயிலை சுற்றி உள்ள கிராம மக்களும் குல தெய்வமாக வழிபடுவோரும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் அத்திருவிழாவை ஒட்டி, கரகம், பால்குடம், அலகு காவடிகளை காவேரி ஆற்றங்கரையிலிருந்து, புறப்பட்டு, கிராமத்தில் உள்ள வீதிகளிலும் உள்ள வீடுகளில் கரகம், காவடிகளுக்கு தீபாராதனை எடுத்து பொதுமக்கள் வழிப்பட்டு, கோயிலை வந்தடைந்தனர். பின், கோயிலில் எதிரில் அமைக்கப்பட்ட தீ குண்டத்தில், மேள தாளம் முழங்த, விண்ணை பிளக்க வைக்கும் வாண வேடிக்கை நடை பெற, கரகம், அலகு காவடிகள் தீ குண்டத்தில் இறங்கி தீமிதி திருவிழா நடைபெற்றது.
அத் தீ மிதி திருவிழாவை காண உள்ளூர் மட்டுமல்லாது மயிலாடுதுறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் சுமார் 5000 த்திற்கு மேற்பட்ட கிராமவாசிகள் கலந்து கொண்டு தீமிதி திருவிழாவை ஆர்வத்துடனும் பக்தியோடும் கண்டு களித்தனர். மேலும் நேற்றிரவு தேரில் அம்மன் வீதியுலாவும், இன்றும் நாளையும் அரிசந்திரா நாடகமும் நடைபெற இருக்கிறது.






















